யோகிராம் சுரத்குமார் மகராஜின் 15ம் ஆண்டு ஆராதனை விழா
திருக்கோவிலுார்: திருவண்ணாமலை, பகவான் யோகிராம் சுரத்குமார் மகராஜின், 15ம் ஆண்டு ஆராதனை விழா, மார்ச், 4 மற்றும், 5ம் தேதிகளில் நடக்கிறது.முதல் நாள் காலை, 6:30 மணிக்கு, ஹோமங்கள் மற்றும் அதிஷ்டானத்தில் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு, டாக்டர் கணேஷ் குழுவினரின் நாமசங்கீர்த்தனம்; மாலை, 4:30 மணிக்கு, பகவான் யோகிராம் சுரத்குமார் மகராஜுடன் ஏற்பட்ட அனுபவங்களை பக்தர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். மாலை, 6:15 மணிக்கு, மயிலாடுதுறை அறிவகம் இல்லக் குழந்தைகளின் பக்தி பாடல், நடன நிகழ்ச்சி நடக்கிறது. இரண்டாம் நாளான, 5ம் தேதி காலை, 6:30 மணிக்கு, மகன்யாசம் மற்றும் அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், மகா தீபாராதனை; 9:00 மணிக்கு, நித்யானந்தகிரி சுவாமி முன்னிலையில் தீர்த்தநாராயண பூஜை; 11:00 மணிக்கு, பக்தர்களின் பஜனை நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு, சற்குருநாத ஓதுவார் குழுவினரின் தேவாரம்; 6:15 மணிக்கு, கயல்விழி ஜயகிருஷ்ணா குழுவினரின் நாட்டியம்; இரவு, 8:00 மணிக்கு, பகவானின் உற்சவ மூர்த்தியுடன் வெள்ளி ரதத்தில் ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.