அவிநாசி அங்காளம்மன் குண்டம் திருவிழா
ADDED :3642 days ago
அவிநாசி: அவிநாசி, காந்திபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், 71வது ஆண்டு நந்தா தீப குண்டம் திருவிழா, மார்ச், 5ல் சாட்டு விழாவுடன் துவங்குகிறது.
மார்ச், 7ல், மகா சிவராத்திரி, கொடியேற்றம், 8ல் அலகு தரினம், இரவு குண்டம் திறப்பு, அம்மனுக்கு வெண்ணெய் சாத்துதல், குண்டத்துக்கு பூப்போடுதல், சுவாமி புறப்பாடு, 9ல் அதிகாலை குண்டம், இரவு நாதஸ்வர இன்னிசையுடன் ரிஷப வாகன காட்சியில் அம்மன் புறப்பாடு ஆகியன நடைபெறுகிறது. விழாவில், 10ல் இரவு வேடுபறி, பரிவேட்டை, தெப்பத்தேர், 11ல் கொடியிறக்கம், மஞ்சள் நீர் விழா உற்சவம், 12ல் பேச்சியம்மன் அபிஷேக பூஜை, 13ல் மகாபிஷேகம் உற்சவம் பூர்த்தி நடைபெறுகிறது.