உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில்தேர் திருப்பணிகள் துவக்கம்

மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில்தேர் திருப்பணிகள் துவக்கம்

மீஞ்சூர்: மீஞ்சூர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள, தேர் சிதிலமடைந்து இருந்தது.
இந்நிலையில், 2014ல், புதிய தேர் அமைக்கும் திருப்பணிகள் துவங்கின. ஆனால், நிதி ஆதாரம் இல்லாதது, உள்ளிட்ட காரணங்களால், பணிகள் முடிவடையாமல் இருந்தன. இதுகுறித்து, கடந்த, 18ம் தேதி, நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, இரு நாட்களாக, தேர் திருப்பணிகள் நடந்து வருகின்றன. நிதி ஆதாரம் முழுமையாக இல்லாமல், பணிகள் துவங்கியுள்ளதால், இந்த ஆண்டு பிரம்மோற்சவத்திற்குள், தேர் தயாராகுமா? என, பக்தர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !