ஊத்துக்கோட்டை காரணீஸ்வரர் கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை
ADDED :3642 days ago
ஊத்துக்கோட்டை: காரணீஸ்வரர் கோவிலில், நந்தி, கணபதி, முருகன் மற்றும் பலிபீடம் ஆகியவற்றின் பிரதிஷ்டை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி அருகேயுள்ளது காரணி கிராமம். அங்கு, ஆரணி ஆற்றை ஒட்டி, காரணீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த இக்கோவிலை சீரமைக்கும் பணியில் பகுதிவாசிகள் ஈடுபட்டனர். அதில், பக்தர்கள் பங்களிப்புடன், கோவில் வளாகத்தில், நந்தி, கணபதி, முருகன் மற்றும் பலிபீடம் ஆகியவை பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று காலை நடந்தது. யாகசாலை அமைத்து காரணீஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காரணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இக்கோவிலில், 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.