வெட்டவெளி சித்தர் பீடத்தில் ஹயக்கிரீவர் ஹோமம்!
ADDED :3534 days ago
கடலுார்: கடலுார், வெட்டவெளி சித்தர் பீடத்தில் ஹயக்கிரீவர் ஹோமம் நடந்தது. கடலுார், ஆல்பேட்டையில் உள்ள வெட்டவெளி சித்தர் பீடத்தில் நேற்று 28ம் தேதி ஹயக்கிரீவர் ஹோமம் நடந்தது. பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள நடந்த ேஹாமத்தில் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா வழங்கப்பட்டது.