செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா
ADDED :3624 days ago
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவில் விழா, ஆறு நாட்கள் நடக்கிறது. இளம்பிள்ளை, கே.கே.நகரில் உள்ள இ.காட்டூர் செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவில் விழா இன்று துவங்கி, மார்ச், 5ம் தேதி வரை, தொடர்ந்து ஆறு நாட்கள் நடக்கிறது. நாளை, பச்சை தண்ணீரில் ஜோதி ஏற்றுதல், சக்திகரகம், பூவோடு எடுத்தலும் நடக்கிறது. தொடர்ந்து, பூ மிதித்தல், புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலம், அம்மன் அழைத்தல், பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு, அக்னிகரகம் எடுத்தல் மற்றும் சிலம்பாட்டம், மஞ்சள் நீரோட்டம் நடக்கிறது.