முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3525 days ago
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே குட்டி மேய்க்கிபட்டி கீழக்கரையில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கடம்பவன அம்மன் கோயில் பிரகாஷ் பட்டர் தலைமையில் சிவாச்சாரியர்கள், கிராம மரியாதைக்காரர்கள், திருப்பணிக்குழுவினர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். பரிவார தெய்வங்களான கருப்பணசுவாமி, செல்வவிநாயகர் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.