ஊத்துக்கோட்டை காரணீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா
ADDED :3528 days ago
ஊத்துக்கோட்டை : காரணீஸ்வரர் கோவி லில், வரும், 7ம் தேதி, முதலாம் ஆண்டு, சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி அருகே, காரணி கிராமத்தில் காரணீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பக்தர்கள் பங்களிப்புடன் கடந்த, 26ம் தேதி, கணபதி, முருகன், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டன.வரும், 7ம் தேதி, முதலாம் ஆண்டு சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. விழாவை ஒட்டி, அன்று காலை, 6:00 மணி, 11:00 மணிக்கு ருத்ராபிஷேகம், மதியம், 3:00 மணிக்கு ஹோமம் நடைபெற உள்ளது. 8ம் தேதி காலை, 3:00 மணிக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது.