கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :3528 days ago
சங்ககிரி: சங்ககிரி, மலையடிவாரத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதில், அம்மனுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று மாலை, பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனை வழிப்பட்டனர்.