உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானியில் கோவில் திருவிழா: நாளை போக்குவரத்து மாற்றம்

பவானியில் கோவில் திருவிழா: நாளை போக்குவரத்து மாற்றம்

பவானி: கோவில் திருவிழாவை முன்னிட்டு, பவானியில் நாளை (மார்ச் 2) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பவானி செல்லியாண்டியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நாளை நடக்கிறது. இதையொட்டி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக அன்று காலை, 8 மணி முதல் இரவு, 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து பவானி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோட்டில் இருந்து வரும் டவுன் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து திரும்பி செல்லும். ஆப்பகூடல், அந்தியூர், சக்தியமங்கலம் பகுதி பஸ்கள் மகளிர் போலீஸ் ஸ்டேசன் வரை வந்து திரும்பி செல்லும். அந்தியூர், மேட்டூர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஈரோடு செல்ல ஊராட்சிக் கோட்டை மலைப்பாதை வழியாக, செலம்பகவுண்டன்பாளையம், ஜம்பை பிரிவு வழியாக, ஜம்பை, ஆப்பகூடல், கவுந்தப்பாடி வழியே செல்ல வேண்டும். ஈரோட்டில் இருந்த மேட்டூர் செல்லும் புறநகர பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, மகளிர் போலீஸ் ஸ்டேசன் வழியாக காடையம்பட்டி, தொட்டிபாளையம், ஊராட்சிக்கோட்டை வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து மேட்டூர் செல்லும். கோவை, ஈரோடு, சித்தோடு பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் சேலம் பைபாஸ் சாலை, குமாரபாளையம், எடப்பாடி சாலை, பவானி புதிய பாலம் வழியாக மேட்டூர் செல்ல வேண்டும். மேட்டூரில் இருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் அம்மாபேட்டை, அந்தியூர் வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !