ஊட்டியில் மாணவ, மாணவியருக்காக சிறப்பு கூட்டு பிரார்த்தனை
ADDED :3529 days ago
ஊட்டி: ஊட்டியில் ஈழுவா தீயா சங்க கூட்டம் நடந்தது. அதில், பொதுத் தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு; பிளஸ்-2 மாணவ, மாணவியருக்காக, 2ம் தேதி, சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஊட்டி மஞ்சனகொரை பகுதியில் உள்ள, ஸ்ரீ நாராயணா குருகுல மடத்தில், மாலை, ௫:00 மணிக்கு, இதனை நடத்த, சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பங்கேற்க அனைத்து மாணவ, மாணவியருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.