அகங்காரத்தை நீக்குவதற்கு என்ன வழி?
ADDED :3905 days ago
ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், எந்த யோகத்தைப் பின்பற்றினாலும், எந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றினாலும், அகங்காரத்தைத் தொலைத்துத் தலைமுழுக வேண்டும் என்பது முக்கியம். ஏனென்றால், இறையருளைப் பெறவும் பெருக்கவும் தடையாக இருப்பது அகங்காரம். அகங்காரத்தை நீக்கிக் கொள்வதற்குப் பல வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றில் நடைமுறைக்கு ஏற்றது, நான் இறைவன் கையிலுள்ள ஒரு கருவி என்ற எண்ணத்தைப் போற்றி வளர்ப்பதே ஆகும்.