புலனடக்கம் என்றால் என்ன?
ADDED :3905 days ago
ஐம்புலன்களுக்குத் தீயவற்றினால் வரக் கூடிய சுகத்தைத் தரக் கூடாது. இதுதான் புலனடக்கம் என்று சொல்லப்படுகிறது. ஐம்புலன்களையும் தூய் மையுடன் வைத்திருக்க வேண்டும். ஐம்புலன்களையும் எப்படி ஆன்மிகத்திற்கு உகந்ததாகப் பயன்படுத்த வேண்டுமோ, அவ்விதம் பயன்படுத்துவ தே ஐம்புலன்களைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகும். அப்படி ஐம்புலன்களையும் தூய்மையுடன் வைத்திருப்பவர்களுக்கே தெய்வ தரிசனம் சாத்தியம்.