உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறிஞருக்கு உரிய இலக்கணம் யாது?

அறிஞருக்கு உரிய இலக்கணம் யாது?

முதலாவது பண்பு, தலையாய பண்பு அடக்கம். ஏகாதி என்ற நூல் சான்றோரிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்று, பின்வரும் ஏழு பண்புகளைக் குறிப்பிடுகிறது. 1. பிற உயிர்களைக் கொல்லாமை, 2. பிறர் கொலை செய்வதை விரும்பாமை, 3. பொய் கூறாமை, 4. பிறர் மனைவியை விரும்பாமை, 5. கீழ்மக்களோடு சேராமை, 6. பிறர் பேசுகிற மறைபொருளைக் கேட்க விரும்பாமை, 7. தீய சொற்களைப் பேசநேர்ந்தால் ஊமையாக இருத்தல். பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் நீக்கிச் செய்கின்ற செயலே அறச் செயல் ஆகும். என்ற வள்ளுவப் பெருந்தகையின் (குறள் எண் - 35) கருத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !