முனீஸ்வரன் கோவில் திருவிழா
ADDED :5161 days ago
கிள்ளை : கிள்ளை எம்.ஜி.ஆர். நகர் முனீஸ்வரன் கோவில் திருவிழா நடந்தது.கிள்ளை எம்.ஜி.ஆர் நகர் முனீஸ்வரன் கோவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது மூன்றாம் ஆண்டு திருவிழா நடந்தது. இரவு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் கலைமணி, முன்னாள் மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட சுற்றுப் பகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மலர் உள்ளிட்ட விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.