உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூரில் பொங்கல் வழிபாடு

வேலூரில் பொங்கல் வழிபாடு

வேலூர்: வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் ஓம் சக்தி நாராயணி பீடத்தில் நாராயணி அம்மனுக்கு 108 சுமங்கலிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை சக்தி அம்மா துவக்கி வைத்தார். நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, தங்கக் கோயில் இயக்குனர் சுரேஷ் பாபு, பீடம் மேலாளர் சம்பத் கலந்து கொண்டனர்.
* கணபதி பூஜை: வேலூர் அடுத்த ஸ்ரீ புரம் தங்க கோவிலில் வைஸ்ணவி யானை உள்ளது. இந்த யானைக்கு ஆண்டு தோரும் கணபதி பூஜை நடப்பது வழக்கம். இந்தாண்டு வைஸ்ணவி யானைக்கு கணபதி பூஜை நடந்தது. சக்தி அம்மா கணபதி பூஜை செய்தார். பீடம் மேலாளர் சம்பத், நாராயணி பீடம் அறங்காவலர் குழு தலைவர் சவுந்தரராஜன், தங்க கோவில் இயக்குனர் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !