உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி சுப்பிரமணியர் கோவில் கோபுரம் கட்டும் பணி தீவிரம்!

செஞ்சி சுப்பிரமணியர் கோவில் கோபுரம் கட்டும் பணி தீவிரம்!

செஞ்சி : செஞ்சி ஏரிக்கரை சுப்பிரமணியர் கோவிலில் கருவறை கோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. செஞ்சி பி. ஏரிக்கரையில் சிறிய குன்றின் மீது சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலை 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கோவில் உள்ள சிறிய குன்று பகுதியை விரிவு படுத்தி 20 அடி உயரத்தில் சுற்று பிரகாரம் கட்டும் பணி நடக்கிறது. கருவறை கோபுரத்தின் மீது கற்பலகைகள் அமைக்கும் பணி நடந்தது. கருவறையில் மூடுவதற்காக திருவண்ணாமலை, அடி அண்ணாமலையார் கோவில் பகுதியில் இருந்து 8 அடி நீளமுள்ள 20 கற்பலகைகளை கிரேன் உதவியோடு கொண்டு வந்தனர். இந்த பலகை கற்களை கொண்டு கருவறை கோபுரம் அமைக்கும் பணியை செய்து முடித்தனர். அடுத்த கட்டமாக கருவறை கோபுரம் அமைக்கும் பணியும், வெளி மண்டபத்தில் ஆறு தூண்களில் அறுபடை முருகனின் திருக்கோலத்தை நிறுவ முடிவு செய்துள்ளனர். திருப்பணிகளை செஞ்சி நெல் அரிசி வியாபாரிகள் சங்கம், மணிலா வியாபாரிகள் சங்கம், செஞ்சி மார்க்கெட் கமிட்டி எடைப் பணியாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !