பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!
திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கற்பகவிநாயகர் கோயிலில் 10 நாட்கள் சதுர்த்தி பெருவிழா நடைபெறும். இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி இரவு வாகனங்களில் கற்பகவிநாயகர் திருவீதி உலா நடைபெறும்.நாளை முதல் எட்டாம்நாள் வரை காலை 9.30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஆக.28 மாலை கஜமுகாசுர சம்ஹாரம் நடைபெறும். ஆக.31ம் தேதியன்று தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் ஆண்டிற்கு ஒரு முறையாக மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். நவ.1 ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலையில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும். இரவில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடைபெறும். ஏற்பாட்டினை நிர்வாக அறங்காவலர்கள் தேவகோட்டை ராமனாதன்செட்டியார், அமராவதி புதூர் சிதம்பரம் செட்டியார் செய்து வருகின்றனர்.