ரமலான் சிந்தனைகள்:உணவை வீணாக்காதீர்!
சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில கருத்துக்களை சொல்கிறார்கள்.சாப்பிடும் முன்பு செருப்புகளை கழற்றிவிட வேண்டும். அது பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும். இடது கையால் உண்ணுவதும் தண்ணீர் குடிப்பதும் கூடாது. நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது. ஒரு வேளை தன்னை மறந்த நிலையில் அவ்வாறு தண்ணீர் குடித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக அதை வாந்தி எடுத்துவிட வேண்டும்.குடும்பத்திலும், சமுதாயத்திலும் எல்லோரும் ஒன்று கூடி சாப்பிட வேண்டும். இரவில் பட்டினியாக இருக்கக் கூடாது. அப்படி பட்டினிகிடந்தால் விரைவில் முதுமை தட்டிவிடும். உணவை வீணாக்கக் கூடாது.
சாப்பிடும் தட்டில் மீதி உணவு இருக்கக்கூடாது. தட்டை வழித்து சாப்பிட்டுவிட வேண்டும். விரல்களையும் சூப்பிவிட வேண்டும்.வீண் செலவும், ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ண வேண்டும். உணவைத் தர்மம் செய்ய வேண்டும். ஒட்டகம் போல் ஒரே நேரத்தில் தண்ணீரை குடிக்கக் கூடாது. இரண்டு அல்லது மூன்று முறை நிறுத்தி மூச்சு விட்டு "பிஸ்மில்லாஹ் என்று கூறி குடிக்க வேண்டும்.வயிறு நிறைய சாப்பிடக்கூடாது. இவ்வாறு சாப்பிடுபவர்கள் மரணத்திற்கு பிறகு பசியுடையவர்களாக இருப்பார்கள். பிறருக்கும் பகிர்ந்து கொடுத்து சாப்பிட வேண்டும். அண்ணலார் அவர்களின் இந்த நல்ல கருத்துக்களை சிந்தியுங்களேன்!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.42 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.34 மணி.