உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் இன்று சிவராத்திரி வழிபாடு

பொள்ளாச்சி கோவில்களில் இன்று சிவராத்திரி வழிபாடு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதி கோவில்களில் இன்று மகாசிவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், இன்று இரவு, 7:30 மணிக்கு அனுக்கிரஹ, விக்னேஸ்வர, கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம், ஏகாதச ருத்ர ேஹாமம் நடைபெறும். இரவு, 9:00 மணிக்கு அன்னதானம், 10:00 மணிக்கு முதற்கால அபிேஷகம், 11:30 மணிக்கு கரப்பாடி இளைஞரணி வழங்கும் தேவராட்டம், நள்ளிரவு, 12:00 மணிக்கு இரண்டாம் கால அபிேஷகம், 1:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 2:00 மணிக்கு மூன்றாம் கால அபிேஷகம், 4:00 மணிக்கு நான்காம் கால அபிேஷகம், அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் சுப்ரபாதம் நடக்கிறது.

பாலக்காடு மாவட்டம், கோவிந்தாபுரத்திலுள்ள குபேர லிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு திருமூர்த்தி மலை தீர்த்தத்துக்கு புறப்படுதல், மாலை, 5:00 மணிக்கு தீர்த்த குட  ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 11:00 மணிக்கு அன்னதானம், இரவு, 9:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 10:00 மணிக்கு சிவராத்திரி பூஜை கள் இடம் பெறுகின்றன. பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு பின்புறம், முத்துகுமாரசாமி லே-அவுட், ஜீவமுக்தி சிவாலயத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 10:00 மணிக்கு கொடியேற்றம், மாலை 4:00 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தன. இன்று இரவு, 8:00 மணிக்கு முதற்கால பூஜை, 9:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு கூட்டு வழிபாடு, 3:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 8ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 8:00 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

சிங்காநல்லூர் பாலாற்றங்கரை சித்தாண்டீஸ்வரர் கோவிலில் இன்று மதியம், 12:00 மணிக்கு தெய்வகுளம் காளியம்மன் கோவில் தீர்த்தத்துக்கு செல்லுதல், மாலை, 5:00 மணிக்கு கோவிலுக்கு தீர்த்தம் வந்தடைதல், இரவு, 8:00 மணிக்கு சிக்காட்டம், 9:00 மணிக்கு முதற்கால அபிேஷகம், 10:00 மணிக்கு குழந்தைகள் நடன நிகழ்ச்சி, 12:00 மணிக்கு இரண்டாம் கால அபிேஷகம் இடம்பெறுகின்றன. நாளை அதிகாலை, 3:00 மணிக்கு மூன்றாம் கால அபிேஷகம், 4:00 மணிக்கு மகா கணபதி, நவக்கிரக ேஹாமம், 5:00 மணிக்கு நான்காம் கால அபிேஷகம், 6:00 மணிக்கு பள்ளய பூஜை, 8:00 மணி முதல் அன்னதானம், 10:30 மணிக்கு மகா அபிேஷகம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும்.

வடுகபாளையம் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில், இன்று காலை, 5:20 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு புண்ணிய தீர்த்தம் எடுக்க செல்லுதல், மாலை, 6:30 மணிக்கு புண்ணிய தீர்த்தம் அம்மனுக்கு செலுத்துதல், இரவு 7:00 மணிக்கு சிவனுக்கு மகா அபிேஷகம், 9:00 மணிக்கு அம்மனுக்கு திருவாபரணம் எடுத்து வருதல், 9:30 மணிக்கு படி பூஜை, 10:30 மணிக்கு மயான பூஜை, சக்தி கும்பம் அழைத்தல் நடைபெறுகிறது. நாளை காலை, 8:00 மணிக்கு பள்ளய பூஜை, 10:00 மணிக்கு அன்னதானம், மாலை 4:00 மணி க்கு பூவோடு எடுத்தல், 9ம் தேதி காலை 10:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மகா அபிேஷகம் நடைபெறும்.

கிணத்துக்கடவு வடசித்தூர் பிளேக் மாரியம்மன் கோவிலில், இன்று காலை, 8:30 மணிக்கு மகா கணபதி பூஜை, 9:00 மணி க்கு அம்மன் பூஜை, நாம ஜெபம், இரவு, 8:30 மணிக்கு 108 தீர்த்தக்குட பூஜை, திருவிளக்கு பூஜை, அன்னதானம், இரவு, 11:00 மணிக்கு சிறப்பு இசை நிகழ்ச்சி, நாளை காலை, 5:30 மணிக்கு பலாபிேஷகம் நடைபெறும்.

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில், சிவன் ராத்திரி திருவிழா இன்று நடக்கிறது. இக்கோவிலில், இத்திருவிழா கடந்த முதல் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. பின், வேலுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று படி விளையாட்டு நேற்று வரை நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு பால் பூஜையும், அலங்கார பூஜையும், காலை, 8:00 மணியளவில் செண்டாமரம் கொண்டு வந்து ஸ்தாபனம் செய்தலும், மாலை, 6:00 மணிக்கு பால் பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கின்றன. இரவு, 9:00 மணிக்கு மாமாங்கம் ஆற்றுக்கு புறப்படுதல், இரவு, 11.00 மணிக்கு ஆற்றில் இருந்து சக்தி வேல், சக்தி கரகத்தோடு சுவாமி திருவீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறது. நாளை, பகல், 12:00 மணியளவில் மகா அபிசேகத்துடன் சிவன்ராத்திரி திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் பூசாரி, விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !