பரமக்குடி முத்தாலம்மன் பங்குனித் திருவிழா மார்ச் 11 ல் பூச்சொரிதல்
ADDED :3545 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி மார்ச் 11 அம்மனுக்கு பூச்சொரிதல் நடக்கிறது.
தொடர்ந்து மார்ச் 15ல் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. 16ம் தேதி காலை கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா துவங்குகிறது. அன்று முதல் தினமும் இரவு அம்மன் பல்லக்கு, காமதேனு, யானை, குதிரை, சிம்மம், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மார்ச் 24 காலை அக்னிச்சட்டியும், இரவு 7 மணிக்கு தீபரத தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 26 அதிகாலை 4 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவு செய்கின்றனர். அன்று இரவு அம்மன் சயன கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்து வருகின்றனர்.