உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமிநாதர் கோயில் தேரோடும் வீதி :சீரமைக்க ரூ.65லட்சம் நிதி ஒதுக்கீடு

பூமிநாதர் கோயில் தேரோடும் வீதி :சீரமைக்க ரூ.65லட்சம் நிதி ஒதுக்கீடு

திருச்சுழி: திருச்சுழி பூமிநாதர் கோயில் தேரோடும் வீதி செப்பனிட 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திருச்சுழியில் புகழ் பெற்ற பூமிநாதர் கோயில், ரமண மகரிஷி பிறந்த புண்ணிய தலம் என்பதால், தினமும் மாநிலங்கள், வெளி நாட்டவர்களும் வந்து செல்வர். இங்குள்ள பூமிநாதர் கோயிலின் தேரோடும் வீதி குண்டும், குழியுமாக இருந்தது. இதை சீரமைக்க பல அமைப்புகள் போராடி வந்தன. தேரோடுவதற்கு சிரமமாக இருந்தது. இந்நிலையில், அரசு தேரோடும் வீதியில் சிமெண்ட் ரோடு அமைக்க, 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில் உள்ளாட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !