உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் 300 கோயில்களில் இன்று மகா சிவராத்திரி விழா

ராமநாதபுரம் 300 கோயில்களில் இன்று மகா சிவராத்திரி விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோயில்களில் இன்று மகா சிவராத்திரி விழா நடக்கிறது. கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்கள், இஷ்ட, குல தெய்வ கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மாசி அமாவாசை நாளில் மகா சிவராத்திரி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டுமகா சிவராத்திரியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட கோயில்களில் பிப்., 28, மார்ச் 1ல் காப்பு கட்டு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதையொட்டி சுவாமிக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன.

சிவராத்திரி நாளான இன்று மதியம் ஏராளமான கோயில்களில் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கின்றன. காவல் தெய்வ கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நள்ளிரவில் அருள்வாக்கு கூறப்படுகிறது. பக்தர்கள் ஏராளமானோர் குல தெய்வங்களுக்கு ஆடு பலியிட்டும். முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சிவாராத்திரி விழாவிற்காக வெளியூர்களில் உள்ளோர் தங்களது கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !