உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய கடிகாரம்

சூரிய கடிகாரம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற திருவிசைநல்லூர் தலம். இறைவன் சிவயோகிநாதர்; இறைவி சவுந்தரநாயகி, கோயிலின் தென் மதிற்சுவர் அருகே சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் உள்ளது. காலையில் சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்தக் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரைவட்ட கோலம் அமைக்கப்பட்டு, அதைச் சுற்றிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நேரத்தைக் குறிக்கும் எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரிய ஒளி இந்த ஆணி மேல் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரமாகும். தமிழர்கள் வானவியல் அறிவியல் வல்லுநர்களாகத் திகழ்ந்ததற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !