உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் சிவாலயங்களில் சிவராத்திரி சிறப்பு பூஜை!

விருதுநகர் சிவாலயங்களில் சிவராத்திரி சிறப்பு பூஜை!

விருதுநகர்: விருதுநகரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். விருதுநகர் சொக்கர் கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உட்பட சுற்று பகுதி கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலையில் தேவாரம், திருவாசகம், திரு அருட்பா, திருமந்திரம், பஜனைநடந்தது. தொடர்ந்து பக்தி இன்னிசை, பக்தி பாடல்கள் பாடப்பட்டது. இரவு சிவ பெருமானுக்கு வீணை இசையஞ்சலி நடந்தது. தொடர்ந்து சிவன் நாமம் எழுதும் போட்டி , சுழலும் சொல்லரங்கம், பட்டிமன்றம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. கம்மாபட்டி இருளப்பசாமிகோயில், முருகன்கோயில், பெரியமாரியம்மன்கோயில், மாதாங்கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. முதலியார்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் கையில் அப்பம் சுடுதல் நடந்தது. நாச்சியார்பட்டி காமாட்சியம்மன், தைலாகுளம் வீரகாளியம்மன்கோயில், கம்மாபட்டி நிறைகுடம் அய்யனார் கோயில் மற்றும் மம்சாபுரம்,வன்னியம்பட்டி,நத்தம்பட்டி உட்பட பல்வேறு கிராமகோயில்களிலும் சிவராத்திரி விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !