சிவராத்திரி விழா கோலாகலம்: கிராமங்களில் குல தெய்வ வழிபாடு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிபட்டணம் முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில் மகா சிவராத்திரி விழா பிப்., 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்வேறு அலங்காரங் களில் அம்பாள் அருள்பாலித்தார். சிவராத்திரியையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு தேரோட்டம் வீதியுலா நடந்தது. ஆயிரவைசிய மகாஜன சபை தலைவர் கேசவன், டிரஸ்டி ஜெயக்குமார், விழா தலைவர் பிச்சை உள்பட ஏராள மான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயலர் பார்த்தீபன், இளங்கோவன் செய்தனர்.
மண்டபம் சேதுநகர் பாபநாச ஈஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. மாலையில் நடந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் ஏராளமானோர் பங்கேற் றனர். வேந்தோணி மரக்காயர் பட்டணம் ராஜகணபதி கோயில் சிவராத்திரி விழாவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. முதுகுளத்தூர் காக்கூர் வெள்ளை யம்மாள் அம்மன் கோயில் சிவ ராத்திரி விழாவில் சிறப்பு ஆராதனை நடந்தது.
பரமக்குடி: பரமக்குடி குருநாதன் கோயிலில் வேலங்குடி கருப்பண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தங்க, வெள்ளி கவசம் அணிவிக்கப் பட்டு தீபாராதனை நடந்தது. ஈஸ்வரன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சுந்தரராஜப் பெருமாள் கோயில் கருப்பண சுவாமிக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
பரமக்குடி முத்தாலம்மன் கோயில், காக்காதோப்பு பதி னெட்டாம் படி கருப்பண சுவாமி கோயில்களில் பால்குடம், காவடி, கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் நிறைவுசெய்தனர். ஆர்.எஸ்.மங்கலம்: மேலச்செங் குடி பத்திரகாளியம்மன் கோவிலில் சிவராத்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றி யூர் வல்மீகநாதர், தொண்டி சிதம்ப ரேஸ்வரர் கோயில்களில் சிவராத்தி ரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம் போன்ற அனைத்து வகையான அபி ஷேகங்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் கோபுரங்கள் வண்ணமின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி சிவராத்திரி விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். சர்வ அலங்காரத்துடன் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தனி அம்மன் தேரில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களி லிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயில் வீதிகளிலும், அக்னிதீர்த்த கடற்கரையிலும் குவிந்தனர். சிவராத்திரியையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்தனர். கலை நிகழ்ச்சிகளும் நடந்தன