திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா
ADDED :3545 days ago
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பல்வேறு மாநில பரதநாட்டிய கலைஞர் கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார்.இக்கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது. விழாவை கலெக்டர் கரிகாலன் துவக்கி வைத்தார்.5 நாட்கள் நடக்கும் விழாவில் பல்வேறு மாநில கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.