உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரிம்பகேஷ்வரர் கோவிலில் நுழைய முயன்ற பெண்கள் கைது!

திரிம்பகேஷ்வரர் கோவிலில் நுழைய முயன்ற பெண்கள் கைது!

புனே: மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பகேஷ்வரர் கோவிலுக்குள், தடையை மீறி, நுழைய முயன்ற, 150க்கும் மேற்பட்ட  பெண்களை, போலீசா ர்கைது செய்தனர்.  மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், திரிம்பக் நகரில் உள்ள திரிம்பகேஷ்வரர் கோவிலுக்குள்,  பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  திருப்தி தேசாய் என்பவர் தலைமையில், ‘பூமாதா படை’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண்கள்,  அந்த கோவிலுக்குள்  நுழையப் போவதாக அறிவித்தனர். நேற்று, புனே  நகரிலிருந்து பல வாகனங்களில், திரிம்பக் நகருக்கு செல்ல அவர்கள்  திட்டமிட்டனர்.

பயணத்தை துவக்கும் முன், திருப்தி தேசாய் பேசுகையில்,  “புனிதமான, மகா சிவராத்திரி தினத்தில், திரிம்பகேஷ்வரர் கோவிலு க்குள் எங்களை அனுமதிக்க வேண்டும். கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது, பெண்களுக்கு இழுக்கு,” என்றார்.  இதற்கிடையே, கோவிலு க்குள் பெண்கள் நுழைவதை தடுக்க, நாசிக் நகரம் முழுவதும், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூமாதா படையினரை  தடுத்து நிறுத்த,  பல்வேறு அமைப்பினர் தயாராக  இருந்தனர். இதனால், நாசிக்கில் பதற்றம் நிலவியது.  இந்நிலையில், நாசிக் நோக்கி வந்து  கொண்டிருந்த, பூமாதா படையினரின் வாகனங்கள், கோவிலுக்கு, 80 கி.மீ., துாரத்துக்கு முன், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.  அவர்கள்  அனைவரும், மஹாராஷ்டிரா போலீஸ் சட்டத்தின் கீழ், பல்வேறு பிரிவுகளில் கைது செய்யப்பட்டதாக, மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !