உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் முளைப்பாரி இடும் நிகழ்ச்சி

விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் முளைப்பாரி இடும் நிகழ்ச்சி

திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், யாக சாலையில் முளைப்பாரி இடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும், 18ல் நடைபெறுகிறது. இதற்காக, 38 குண்டங்களுடன் கூடிய யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாக சாலையை சுற்றிலும், நவதானியங்களால் முளைப்பாரி இடும் நிகழ்ச்சி, நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவருக்கு, நவதானியங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டன. பின், யாகசாலைக்கு எடுத்து வரப்பட்டு, தானிய முளைப்பாரி இடப்பட்டது. கும்பாபிஷேகத்தின், முதல் நிகழ்ச்சியாக, வரும், 13ல், முளைப்பாரி, தீர்த்த கலசம், 63 நாயன்மார் திருவீதி உலா ஆகியன நடைபெறுகிறது. ஊர்வலத்தின் போது கொண்டு வருவதற்காக, பாத்திரங்களில் முளைப்பாரி இடப்பட்டது. கோவில் வளாகத்தில், 63 நாயன்மார் சிலைகள், பிரதிஷ்டை செய்ய, ஜலாதி வாசம், நாளை காலை, 9:00 மணியில் இருந்து, 10:00க்குள் நடக்கிறது. வரும், 10ம் தேதி காலை, 9:00 மணிக்கு, 10:00 மணிக்கு, தான்ய வாசம் செய்யும் நிகழ்ச்சியும்; 11ம் தேதி காலை 9:00 மணி முதல், 10:00க்குள், புஷ்பம் மற்றும் ஸ்வர்ண வாசம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !