மாசி சனி, துவாதசி; பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :233 days ago
கோவை: மாசி மாதம் முதல் சனிக்கிழமை மற்றும் துவாதசி திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் மூலவர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் வெள்ளி காப்பு கவசத்துடன் ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.