உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி விழா நடந்தது. சிவராத்திரியை முன்னிட்டு, பவானியில் அமைந்துள்ள பரிகார ஸ்தலம், முக்கூடல் சங்கமம், சுற்றுலா ஸ்தலம் போன்ற பெயர் பெற்று விளங்கிடும் சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர்களான வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் சுவாமிக்கு நான்கு கால யாகபூஜை நடந்தது. மாலை, 7 மணிக்கு முதல்கால யாக பூஜை, இரவு, 10.30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, 1.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, அதிகாலை, 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. நள்ளிரவு, 12 மணிக்கு சிறப்பு பூஜையாக பஞ்சலிங்கபூஜை நடந்தது. பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !