கோட்டமருதுார் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3508 days ago
திருக்கோவிலுார்: கோட்டமருதுார் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த கோட்டமருதுார் கிராமத்தில், ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து செல்வ விநாயகர், நவக்கிரகங்கள், விஷ்ணு துர்க்கை கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கும்ப ஆராதனம், மகாபூர்ணாகுதி முடிந்து கடம் புறப்பாடாகியது. காலை 8:00 மணிக்கு மூல கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.