வையப்பமலை கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3608 days ago
வையப்பமலை: வையப்பமலையில் உள்ள கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த, வையப்பமலையில் எழுந்தருளியிருக்கும் புடவைக்காரி அம்மன், வீரகாரன் சுவாமி, சப்தகன்னிமார் சுவாமியின் கும்பாபி ?ஷக விழாவானது, கடந்த, பிப்ரவரி, 12ம் தேதி நடந்தது. அதன்படி, நிறைவு விழாவான நேற்று மாலை, 5.30 மணியளவில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.