சோழவந்தான் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜை
ADDED :3554 days ago
சோழவந்தான் : சோழவந்தான் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் சிவராத்திரியையொட்டி நேற்று முன் தினம் இரவு விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடந்தன. சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோயிலில் மூலவர் காசி சிவலிங்கத்திற்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேக, ஆராதனைகள் விடிய விடிய நான்கு கால பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கோயிலில் தங்கி அம்மன், சுவாமியை தரிசித்தனர். எம்.வி.எம்.,குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன், திருமூலநாதர் சுவாமி கோயிலில் சுவாமிக்கு ரத்தின கம்பளம் சாத்தப்பட்டு, நெய் அபிஷேகம் நடந்தது. மேல ரத வீதி அங்காள ஈஸ்வரியம்மன் வாலகுருநாதர் சுவாமி கோயிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.