மொரட்டாண்டி காளி கோவிலில் கலச பூஜை
ADDED :3508 days ago
புதுச்சேரி: மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில், அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.புதுச்சேரி- திண்டிவனம் சாலை, மொரட்டாண்டியில் உள்ள பிரத்தியங்கிரா காளி கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு காலை 8.00மணிக்கு கோ பூஜை, கலச பூஜை நடந்தது. பிற்பகல் 3.00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சாந்த பிரத்தியங்கிரா அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, நடாதுார் ஜனார்த்தன சுவாமிகள் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.