உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்!

ராமேஸ்வரம்: மாசி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.  மாசி அமாவாசையையொட்டி நேற்று காலை ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். தொடர்ந்து சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப் பாடாகி அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினர். அங்கு வேதமந்திரங்கள் முழங்க சுவாமிகளுக்கு தீர்த்தாவாரி நடந்தது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். மாலை 6 மணிக்கு அக்னி தீர்த்த மண்டபத்தில் சுவாமிகளுக்கு மகா தீபாரதனை நடந்தது. சுவாமிகள் கோயிலுக்கு திரும்பியதும் கொடி இறக்கப்பட்டு சிவராத்திரி விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !