உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி!

கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி!

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் சிவராத்திரி திருவிழாவில், 81 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்து வணங்கினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் சிவராத்திரியன்று, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு வருகிறார் 81 வயது மூதாட்டி முத்தம்மாள். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மூதாட்டி முத்தம்மாள் மற்றும் பூஜாரிகள் சுந்தரமகாலிங்கம், இருளப்பமுருகன் ஆகியோர், பத்ரகாளியம்மனை வணங்கி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டனர். இதை திரளான பக்தர்கள் தரிசித்தனர். அதிகாலை வரை அப்பங்கள் சுட்டு, பத்ரகாளியம்மன் முன் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு  பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் மாயாண்டி, செயலாளர் சுந்தரராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !