உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் சிவராத்திரி விழா
ADDED :3513 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சிவ ராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடந்தது. மூலவர்களுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மங்களநாதர் நாகாபரணத்துடனும், மங்களேஸ்வரி வெள்ளிக்கவசத்துடனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு விடிய, விடிய பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. திருவாசகம், சிவபுராணம், திருவொம்பாவை பக்தர்களால் பாடப்பட்டன. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.