உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கோவில்களில் பக்தர்கள் சிவராத்திரி வழிபாடு!

காஞ்சிபுரம் கோவில்களில் பக்தர்கள் சிவராத்திரி வழிபாடு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிவராத்திரியை முன்னிட்டு, அனைத்து சிவன் கோவில்களிலும், நேற்று காலை வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி முதல், அனைத்து சிவன் கோவில்களிலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய துவங்கினர். காஞ்சிபுரம் நகரில் உள்ள அனைத்து சிவன் கோவில்களுக்கும், பக்தர்கள் சென்று தரிசனம் செய்தனர்.  தவிர, மாவட்டத்தின், அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர், திருக்கழுக்குன்றம் வேதிகிரீஸ்வரர் உட்பட அனைத்து கோவில்களிலும், சிவராத்திரியை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அதிமாக இருந்தது. கோவில்களில், நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில்களில் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !