உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி நகர வீதிகளில் மயான கொள்ளை ஊர்வலம்!

காஞ்சி நகர வீதிகளில் மயான கொள்ளை ஊர்வலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், நேற்று மாலை, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சிவராத்திரிக்கு மறு நாள் மயான கொள்ளை திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.  பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து, நேற்று மாலை, அலங்கரிக்கப்பட்ட அம்மன், ஊர்வலமாக ராஜவீதி வழியாக வெள்ளக் குளம் மயானத்திற்கு சென்றது. முன்னதாக, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்; சிலர், காளி வேஷமிட்டு, சாலையில் ஆவேசமாக நடந்து சென்றனர். அம்மன் வேஷமிட்டு வந்த பக்தர்கள், பெண்களை தாண்டினால் அவர்களுக்கு ஏற்பட்ட நோய் தீரும் என்பது ஐதீகம். அதன்படி, ஏராளமான பெண்கள், குழந்தைகள் தரையில் படுத்திருக்க, அம்மன் வேஷமிட்டவர்கள் தாண்டி சென்றனர். ஒவ்வொரு பகுதியாக சென்ற இந்த ஊர்வலம், இரவு, 8:00 மணிக்கு மயானத்தை சென்றடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !