இருகூர் அங்காளம்மன் கோவில் குண்டம்
ADDED :3515 days ago
சூலுார் : இருகூர் அங்காளம்மன் கோவிலில், நேற்று நடந்த திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.பிரசித்தி பெற்ற, இருகூர் அங்காளம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் சிவராத்திரியை ஒட்டி, பக்தர்கள் குண்டம் இறங்குவர். நேற்று காலை,6:00 மணிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை, 8:30 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.கோவில் பூஜாரிகளும் பக்தர்களும், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 11:30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று பரிவேட்டையும், நாளை தெப்பத்தேரும், 11ம் தேதி திரு விளக்கு வழிபாடும் நடக்கிறது.