உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துன்முகி ஆண்டில் சேலத்துக்கு பேரழிவு?!..சிவாச்சாரியார்கள் யாகம்!

துன்முகி ஆண்டில் சேலத்துக்கு பேரழிவு?!..சிவாச்சாரியார்கள் யாகம்!

சேலம்: பிறக்க உள்ள தமிழ் புத்தாண்டில், இயற்கை சீற்றத்தால், சேலத்துக்கு பேரழிவு ஆபத்து காத்திருக்கிறது. அதையொட்டியே, சேலத்தில் அஸ்தர ஜப யாகம் நடத்தப்பட உள்ளது என, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சிறப்பு கூட்டம், சேலத்தில் நடந்தது. நேற்று காலை, சேவா சங்கத்தின் மாநில தலைவர், சுவாமிநாத சிவாச்சாரியார் யாகத்தை துவக்கி வைத்தார். அச்சங்கத்தின், அகில இந்திய துணைத் தலைவர், சிவசங்கர சர்மா கூறியதாவது: மழை வெள்ளத்தால், சென்னை பேரழிவை சந்தித்தது. துன்முகி எனும் தமிழ் வருடம் பிறக்க உள்ளது. இந்த ஆண்டில், சேலத்துக்கு, இயற்கை சீற்றத்தால் பேரழிவு ஆபத்து உள்ளதாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காகவே, அஸ்தர ஜப யாகத்தை நடத்துகிறோம். ஆகம விதிப்படி கோவில்களில், அர்ச்சகர் நியமனம் நடக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். அர்ச்சகர்களின் குடும்பத்தினருக்கு, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை, அரசு செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !