உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் உப்பு வைத்து பூஜை!

சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் உப்பு வைத்து பூஜை!

காங்கேயம்: காங்கேயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில், கண்ணாடி உத்தரவு பெட்டியில், உப்பு வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. மலை மீது உள்ள கோவில் சன்னிதானத்தில், ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில், நேற்று முதல் உப்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. மற்ற எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக சிவன்மலை முருகன் கோவிலில், ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். இது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

சிவன்மலை முருகன் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து, குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி கூறுவாராம். அதன்படியே சிவன்மலை ஆண்டவரிடம், பூ வைத்து கேட்கப்படும். அவ்வாறு ஆண்டவர் உததரவு கிடைத்தவுடன், அந்த பொருள் கோவில் மூலவர் அறைக்கு முன் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைத்து தினமும் பூஜை செய்யப்படும். பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு, கால நிர்ணயம் கிடையாது. இன்னொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும். இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இந்த பொருள் நாட்டில் ஏற்றமும் பெறலாம், இறக்குமும் பெறலாம். கடந்த ஜனவரி, 14ம் தேதி முதல், கண்ணாடி பெட்டிக்குள் இரும்பு வைக்கப்பட்டது. நேற்று முதல், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை சேர்ந்த பக்தர் உப்பு வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !