உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அண்ணாமலையார் கோவிலில் சூரிய கிரகண தீர்த்தவாரி!

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் சூரிய கிரகண தீர்த்தவாரி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க, அண்ணாமலையார் சூல வடிவில் பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருளினார். அப்போது, கீர்த்திவாசன் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரியை முன்னிட்டு, பக்தர்கள் பாதுகாப்புக்காக, 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து, மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணா முலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !