பிரான்மலையில் மகா சிவராத்திரி பால்குட விழா
ADDED :3511 days ago
சிங்கம்புணரி: பிரான்மலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பறம்பு மலை பாலமுருகன் கோயிலில் பால்குட விழா நடந்தது. மங்கை பாகர்கோயில் சன்னதியில் ஐந்துஊர் கிராமத்தார் முன்னிலையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் துவக்கி வைத்தார்.பக்தர்கள் பால்குடமெடுத்து மலை மீதுள்ள பாலமுருகன் கோயிலுக்கு சென்றனர்.அங்கு சுகம் தரும் விநாயகர், பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் சிறப்பு பூஜை,அன்னதானம் நடந்தது. முதல் நாள் இரவு பாலமுருகன் தெய்வீக பேரவை சார்பில் கருத்தரங்கு நடந்தது. மாணவர்கள் பேச்சு,நாட்டிய போட்டி, கலைநிகழ்ச்சி நடந்தது.