உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ண காளீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி திருவிழா!

சொர்ண காளீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி திருவிழா!

காளையார்கோவில்:  காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விசேஷ ஹோமத்துடன் துவங்கியது.108 கலச பூஜை, நான்கு கால யாகசாலபூஜை, சிறப்பு அபிஷேகம் , தீபாராதனை நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் 501 விளக்குகளால் லிங்க வடிவில் ஜோதி லிங்கத்தை சிவனடியார்கள் செய்திருந்தனர்.  திருக்கல்யாண பேரூரார் கலைக்கலஞ்சியம் சார்பில் சிவார்ப்பணம், பரதநாட்டியம், யோகா, தேவாரம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேவஸ்தான கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காளீஸ்வரகுருக்கள், ஏஎல் . ஏஆர் அறக்கட்டளையினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !