தேவகோட்டையில் சிவராத்திரி விழா!
தேவகோட்டை: தேவகோட்டையில் சிவராத்திரி விழா கொண்டாடப் பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர்கோயில்,நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோயில், இறகுசேரி மும்முடிநாதர் கோயில், கலங்காது கண்ட விநாயகர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் இரவு நான்கு கால பூஜைகள் நடந்தன. கோட்டூர் நயினார் வயல் அகத்தீஸ்வரர் கோயிலில், சுவாமி மற்றும் கருப்பருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. தாழையூர் உசிலையுடைய அய்யனார் கூத்தாடி முத்து பெரியநாயகி அம்மன் கோயிலில் சுவாமி களுக்கு நான்கு கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கிராமங் களிலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி பூக்குழி இறங்கினர். கோயில் மரபு படி நேற்று பக்தர்களுக்கு பூ வழங்கப்பட்டது. ( வருடத்தில் ஒரு நாள் மட்டும் பூ வழங்கப்படும்) . கீரணியில் துõது ஜெயங்கொண்ட அய்யனார் காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மதியம் பக்தர்கள் காவடிஎடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். துடுப்பூர் கிராமத்திலும் காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது.