நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :3506 days ago
நாமக்கல்: நேற்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடை அடைக்கப்பட்டது. காலை, 9 மணிக்கு கிரகணம் முடிந்ததையடுத்து ,நடை திறக்கப்பட்டு கோயில் சுத்தம் செய்யப்பட்டது. பின் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.