புவனகிரி பகுதியில் மயானக் கொள்ளை உற்சவம்!
ADDED :3506 days ago
புவனகிரி: புவனகிரி பகுதியில் நடந்த மயானக் கொள்ளை உற்சவத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். புவனகிரியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி அம்மன் பூத வாகனத்தில் அமர்ந்து கீழ்புவனகிரி மயானத்திற்கு ஊர்வலமாக சென்றார். தொடர்ந்து மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் காளி வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். கோலாட்டம் நடந்தது. இதேப் போன்று, அங்காளம்மன் கோவில் சுவாமி சிம்ம வாகனத்தில் அமர்ந்து மேல்புவனகிரி மயானத்தில் ம யானக் கொள்ளை உற்சவம் நடந்தது.