கோவில் விழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்!
ADDED :3502 days ago
இடைப்பாடி: இடைப்பாடி அருகே, கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் விழாவில், ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, கவுண்டம்பட்டி சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. தொடர்ந்து, நடந்த சுவாமி ஊர்வலத்தில், ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். ஊர்வலத்தின் போது, சுவாமி முன் உட்கார்ந்த பக்தர்களின் தலையில், பூசாரி தேங்காய்களை உடைத்தார். இதில், உள்ளூர் மட்டுமில்லாமல், வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள், தலையில் தேங்காய்களை உடைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.